காஞ்சிபுரம் மாவட்டம்
12.10.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் உள்ள P.N.கன்னியப்ப செங்குந்தர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஹோப் புறஉலக சிந்தனையற்ற இளம் சீறார்களுக்கான ஆரம்பநிலை பயிற்சி மையத்தை (0-6 EIC – Autism )காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பு அதிகாரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆட்டிசம் என்றால் என்ன மற்றும் ஆட்டிசத்தின் அறிகுறிகள் பற்றி ஹோப் பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் Dr. V. நாகராணி அவர்கள் உரையாற்றினார்.
இப்பள்ளியின் சிறப்பு அம்சங்கள் சிறப்பு கல்வி, பேச்சுப் பயிற்சி, ஆக்குபேஷனல் தெரபி மற்றும் மருத்துவ ஆலோசனை ஆகியவை சிறந்த முறையில் சிறப்பு பயிற்சியாளர்களைக் கொண்டு செயல்பட உள்ளது.
இந்த ஆரம்பநிலை பயிற்சி மையத்தில் சில வருடங்கள் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரலாம். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.